தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த கோ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் அஜ்மல். அந்த படத்தில் ஜீவாவை விட இவரது கேரக்டரே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்தது. அதனால் அடுத்தபடியாக சில படங்களில் ஹீரோவாக கமிட்டானார் அஜ்மல்.
அவர் ஹீரோவாக நடித்து கருப்பம்பட்டி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால் இரண்டுமே வெற்றி பெறாததால் அதற்கடுத்து அவர் நடித்துக்கொண்டிருந்த கதிர்வேல், உலா போன்ற படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. அதேசமயம், தெலுங்கில் அஜ்மலுக்கு மார்க்கெட் சீராக உள்ளது. கடந்த ஆண்டுகூட அவர் நடித்த ப்ரபன்ஜனம் என்ற படம் ஹிட்டடித்துள்ளதாம்.
இந்நிலையில், தமிழிலும் எப்படியேனும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று துடிக்கும் அஜ்மல், தற்போது ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணிடம் தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அந்த படத்திற்கு சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்காததால், தனது நண்பர் ஒருவரையே பைனான்ஸ் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். அந்த வகையில், அஜ்மல் அடுத்து நடிக்கும் படம் 2 கோடி பட்ஜெட்டில் தயாராகயிருப்பதாக கூறப்படுகிறது.