இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனது கரகர குரல் மூலம் கேரக்டர் ரோல்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் வினுசக்ரவர்த்தி. வண்டிச்சக்கரம் உள்பட சில படங்களை இயக்கினார், சில்க் ஸ்மிதா உள்பட சில நடிகைகளை அறிமுகப்படுத்தினார். அருணாச்சலம், நாட்டாமை, மாப்பிள்ளை கவுண்டர், நினைத்தேன் வந்தாய், ஜெமினி உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்துடன் மட்டும் 12 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தேசிங்குராஜா வாயை மூடி பேசுவோம் படத்தில் நடித்தார். தற்போது அபூர்வ மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
70 வயதாகும் வினு சக்ரவர்த்தி கடந்த சில வருடங்களாகவே சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயங்கி விழுந்த வினுசக்ரவர்த்திக்கு நினைவு திரும்பவில்லை. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிக்சை அளித்து வருகிறார்கள். வினு சக்ரவர்த்தி இன்னும் அபாயகட்டத்தை தாண்டவில்லை என்ற மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.