Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயகாந்தைப் பாராட்டும் வலைத்தளவாதிகள்!

31 ஜூலை, 2015 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Social-media-fans-congrats-Vijayakanth

நாட்டில் எது நடந்தாலும், அல்லது விஜயகாந்த் எங்கு பேசினாலும், எது செய்தாலும் அவரைக் கிண்டலடிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் யோகா தினம் அன்று செய்த பயிற்சியைக் கூட விஷம குணம் கொண்ட சிலர் கிண்டலடித்து மீமீக்களையும், கமெண்ட்டுகளையும் போட்டனர். ஆனால், அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய விஷயத்தில் வலைத்தளவாதிகள் உட்பட பலரும் விஜயகாந்தைப் பாராட்டி வருகிறார்கள்.


ஒரு சீனியர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்து கொண்டு அப்துல் கலாமுக்கு அவர் மதுரையில் அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் நேற்று ராமேசுவரத்திலும் உடல் அடக்கம் நடந்த போது நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியது அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. இத்தனை நாட்களாக விஜயகாந்தை வைத்து மீமீக்களை உருவாக்கி கிண்டலடித்தும், ட்ரோல் செய்து வந்தவர்களும் கூட அவரை நேற்று பாராட்டும் விதத்தில் மீமீக்களைப் போட்டனர். அது மட்டுமல்ல நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த கலாமின் உடல் அடக்க நிகழ்வின் போது கூட அரசியல் மாச்சரியங்களைக் கடந்து அன்புமணிக்கு அருகில் அவர் உட்கார்ந்திருந்ததும் ஒரு நெகிழ்ச்சியான பார்வையாகவே பார்க்கப்படுகிறது.


அதோடு, விஜயகாந்த் நேற்று பிரதமரிடம் நேரிடையாகவும், கடிதம் மூலமும் அப்துல் கலாம் பிறந்த தினத்தை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு விஜயகாந்த் இந்த விஷயத்தில் செயல்பட்டுள்ளார் என்று அரசியல், சினிமா சாராத சிலரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.


மேலே உள்ள படம் சமூக வலைதளங்களில் விஜயகாந்தை பாராட்டி வௌியிடப்பட்ட படம் அது. இதுபோன்று ஏகப்பட்ட பாராட்டுகள் அவருக்கு குவிந்தன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in