ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அப்பாடக்கர் என்கிற சகலகலாவல்லவன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு அஞ்சலியும் வந்திருந்தார். அவரைப் பார்த்த செய்தியாளர்கள் சற்றே அதிர்ச்சியடைந்தனர். காரணம்.. முன்பைவிட பல மடங்கு குண்டாகக் காணப்பட்டார் அஞ்சலி. பின்னர் சகலகலாவல்லவன் படத்தின் பாடல்கள் திரையிடப்பட்டன. அதில் ஒரு பாடல் அஞ்சலி நடித்த பாடல். அந்தப் பாடல் காட்சியில், நடனம் ஆட முடியாமல் அஞ்சலி திணறுவது பளிச்சென தெரிந்தது. தற்போது உள்ளதைவிட பல மடங்கு குண்டாக படத்தில் காட்சியளித்தார் அஞ்சலி. போதாக்குறைக்கு அவரது உடம்பை... குறிப்பாக வயிற்றைக் காட்டுவதுபோல் உடையணிந்து இருந்தார். அதனாலோ என்னவோ அஞ்சலியின் கவர்ச்சி எடுபடவே இல்லை. உடம்பைக்குறைக்காமல் இதேபோல் இருந்தால் இனி அஞ்சலியை தமிழ்ப்படங்களில் பார்ப்பது கஷ்டம்தான்.