சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
சினிமா உலகில் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகள் அதிகநாட்கள் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, யார் கட்டுப்பாட்டை விதிக்கிறார்களோ... அவர்களே சில நாட்கள் கழித்து அந்தக்கட்டுப்பாட்டை மீறிவிடுகிறார்கள். அதனால் சினிமா உலகில் உள்ள அமைப்புகள் அறிவிக்கும் கட்டுப்பாடுகளை யாருமே மதிப்பதில்லை. குறிப்பாக முன்னணி தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்கள் சட்டை பண்ணுவதில்லை.
அண்மையில் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. மறைந்த அன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சி.வி.குமார் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இறைவி படத்தின் படப்பிடிப்பு கனஜோராக நடைபெற்றது. அதன் பிறகு இப்றாகிம் ராவுத்தர் இறந்த அன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைக்கும் இறைவி படப்பிடிப்பு ரத்து செய்யப்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனை காரணமாக வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம். அவர்களது அறிவிப்பின்படி எந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாது. ஆனால் வீரம் சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வரும் தல 56 படத்தின் படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்றைக்கு அப்துல்கலாம் இறப்பை ஒட்டி படப்பிடிப்பு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தல 56 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.