தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில், நடிகர் மஞ்சு மனோஜ் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள "அட்டாக்" திரைப்படத்தை செப்படம்பரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 24 பிரேம்ஸ் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில் மஞ்சு மனோஜின் சகோதரர் நடிகர் மஞ்சு விஷ்ணு இப்படத்தை தயாரித்து வருகின்றார். தமிழில் இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மஞ்சு மனோஜ் மற்றும் சுரபியுடன் நடிகர் கெஜபதி பாபு மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜூலை மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரும் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ராம் கோபால் வர்மா இப்படத்தைத் தொடர்ந்து கில்லிங் வீரப்பன் என்ற படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இயக்கி வருகின்றார். நடிகர் மஞ்சு மனோஜ், தயாரிப்பாளர் சிவக்குமார் தயாரிப்பில் இயக்குநர் தசரத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார்.