வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் சண்டைக் கலைஞராக நடித்து வரும் படத்திற்கு ப்ரூஸ் லீ என பெயரிடவுள்ளதாக தெலுங்கு திரை உலக வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் கோலிவுட்டின் வெற்றிப்பட இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் "ப்ரூஸ் லீ" என்ற தலைப்புடன் வெளியானது. ஜீ.வி பிரகாஷ் நடிக்கும் "ப்ரூஸ் லீ" படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாவதால், இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா, ராம் சரண் மற்றும் படக்குழுவினர் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா வேறு தலைப்பை ராம் சரண் படத்திற்கு தேடி வருவதாகக் கூறப்படுகின்றது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். நடிகை கீர்த்தி ராம் சரணுக்கு தங்கையாக நடிக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிவரவுள்ளது. மேலும் இப்படத்தை அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.