தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்த தமிழன் படத்திலேயே இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பிறகு பல படங்களுக்கு இசையமைத்தபோதும் வெளியில் தெரியாமல் இருந்த அவர், பிரபுசாலமன் இயக்கிய மைனா படத்திற்கு பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தார். அதையடுத்து, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரம்மி, பாண்டியநாடு, ஜில்லா, ரோமியோ ஜூலியட் என் தற்போது தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா-சந்தானம் இணைந்து நடித்துள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பது சம்பந்தமாக அவரை பேச அழைத்தபோது, படத்தின் டைட்டீலை விஎஸ்ஓபி என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம் ராஜேஷ்.எம்.
அப்போதுகூட அதை புரிந்து கொள்ள முடியாத இமான், தனது தந்தையிடம் விஎஸ்ஓபி என்பது பற்றி கேட்டபோது, அப்படியா என்று சாதாரணமாக சொல்லி விட்டுவிட்டாராம். ஆனால், பின்னர் அதை தனது மனைவியிடம் இமான் சொன்னபோது, என்னது விஎஸ்ஓபியா என்றாராம்.
அதன்பிறகுதான் அது ஏதோ விவகாரமான பெயராக இருக்கும் போலிருக்கே என்பது புரிந்து கொண்டு, விஎஸ்ஓபி என்றால் என்ன? என்றாராம். அதையடுத்து அது டாஸ்மாக் அயிட்டத்தின் பெயர் என்று சொல்லியிரக்கிறார். இப்படி சொல்லும் டி.இமான், அதற்காக என் மனைவிக்கு குடிக்கிற பழக்கம் இருக்குமோ என்று சந்தேகமாக நினைக்க வேண்டாம். என் மாமனார் குடிக்கிறவர். அதனால் என் மனைவிக்கு அதுபற்றி தெரிந்திருக்கிறது அவ்வளவுதான். என் வீட்டில் நாங்கள் யாருமே குடிக்காததால் அது ஒரு சரக்கின் பெயர் என்பதை எங்களுக்கு தெரியவில்லை என்றார்.