'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவை அழைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த பல படங்களின் தமிழ் ரீமேக்கில் அதிகமாக நடித்தவர் விஜய் என்ற அடிப்படையில்தான் மகேஷ்பாபுவை அழைத்திருக்கிறார்கள் என்று திரையுலகில் லாஜிக் சொன்னார்கள். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மகேஷ்பாபு புலி படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் புலி படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்காக மட்டும் மகேஷ்பாபு சென்னை வரவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படமான 'ஸ்ரீமந்துடு' ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் வெளியாகும் அதே நாளில் தமிழில் 'செல்வந்தன்' என்ற பெயரில் அந்தப்படத்தை 'டப்' செய்யப்பட்டு வெளியிடுகின்றனர்.
'செல்வந்தன்' புரமோஷனுக்காக சென்னைக்கு வரும் மகேஷ்பாபுவை 'புலி' இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு விஜய் அழைத்துள்ளாராம். அதனை மகேஷ்பாபுவும் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். இதில் இன்னொரு ஒற்றுமை என்ன தெரியுமா? 'புலி' படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசன்தான் 'ஸ்ரீமந்துடு' படத்திலும் கதாநாயகி. 'ஸ்ரீமந்துடு' புலி ஆகிய இரண்டு படங்களின் இசையமைப்பாளரும் தேவி ஸ்ரீ பிரசாத்தான்.