பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள, ''ரஜினி முருகன்'' படத்தின் ரிலீஸ் பற்றி தினம் தினம் விதவிதமான செய்திகள் அடிபடுகின்றன. வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரும் ஹீரோவும் மீண்டு கூட்டணி அமைத்துள்ள படம் என்பதால் 'ரஜினி முருகன்' படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறித்த நேரத்தில் படம் வெளியாகததினால் ரஜினி முருகன் படம் குறித்த எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல வடிந்து வருகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளநிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. ரசிகர்கள் மத்தியில் அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். உத்தமவில்லன் படத்தைத் தயாரித்த லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனத்துக்கு பணச்சிக்கல் ஏற்பட்டதால் அடுத்து வெளியாக வேண்டிய ரஜினிமுருகன் படத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிய தகவல் ஒன்று காதில் விழுகிறது. இப்படத்தை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24 ஆம் தேதி ரிலீஸ் செய்ய லிங்குசாமி திட்டமிட்டுள்ளாராம்.