தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்த்தன். மானசீக காதல் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு வடுகபட்டி மாப்பிள்ளை, புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இனிது இனிது காதல் இனிது, மந்திரன் படங்களில் நடித்தார். கடைசியாக 2007ம் ஆண்டு 'பிறகு' படத்தில் நடித்தார். எந்த படமும் ஹம்சவர்த்தனுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
சினிமாவை விட்டு விலகி தந்தையின் பிசினசை பார்த்துக் கொண்டிருந்த ஹம்சவர்த்தன் தற்போது லேஸி பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். அதன் மூலம் ஆண்டுக்கு இரண்டு படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். முதலாவதாக திரைப்படக் கல்லூரி மாணவர் தனஸ் இயக்கும் அமளி படத்தை தயாரிக்கிறார். அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இது ஒரு காமெடி த்ரில்லர் படம். குறுகிய காலத்தில் படத்தை தயாரித்து வெளியிட ஹம்சவர்த்தன் முடிவு செய்திருக்கிறார்.