தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமலஹாசனும் தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்சி தருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இளையராஜாவின் எம்.எஸ்.வி. இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்தார். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கும் படத்தில் அவர் முரட்டு இளைஞன் காளியாகவும், வடசென்னை தாதாவாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் தாதா கேரக்டருக்குத்தான் ரஜினி தாடி வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. முன்பு எப்போதும் இல்லாத தோற்றத்தில் ரஜினி காட்சி அளிக்கிறார்.
எப்போதும் தனது தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர் கமல். நன்றாக மளுமளு முகத்துடன் வருவார். தாடி வைத்திருந்தால் டை அடித்து அழகான தோற்றத்துடன் வருவார். ஆனால் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் லேசான தாடியுடன் அவர் உலா வருவது இதுதான் முதல்முறை. சென்னையில் உலக மலையாளிகள் கவுன்சில் நடத்திய ஹிருதயராகம் இசை நிகழ்ச்சிக்கு மாறுபட்ட இந்த லுக்கில் வந்து அசத்தினார் கமல்.