ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டைரக்டர், தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை ஒப்வொரு நாளும் வேலை வேகமாக நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், நடிகர் நடிகைகளும் அப்படியே நினைத்தபோதும், அவர்களுக்கு ஸ்பாட்டில் பெரிதாக டென்சன் இருக்கப்போவதில்லை. டைரக்டர்கள் அழைக்கும்போது மட்டுமே கேமரா முன்பு வந்து நடித்தால போதுமானது. அந்த வகையில், ஒரு காட்சியை எடுத்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்றவர்கள் ஓய்வாகத்தான் இருப்பார்கள். இதனால் சிலர் அந்த இடைவெளி நேரத்தில் கிரிக்கெட் போன்று ஏதாவது விளையாட்டுகளை அங்கிருக்கும் மற்ற நடிகர் நடிகைகளை ஒன்றுதிரட்டி விளையாடுவார்கள். ஆனால், த்ரிஷா இந்த மாதிரி எந்த விளையாட்டுகளிலும் ஈடுபடுவதில்லையாம். மாறாக, தான் ஆங்கில புத்தகங்களில் படித்த குட்டி குட்டி கதைகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்வதே அவரது முக்கியமான பொழுதுபோக்காக இருக்கிறதாம். அதில் சில அறிவுப்பூர்வமான கதைகளையும் எடுத்துவிடுவாராம். இதனால் சில ஹீரோக்கள் த்ரிஷாவிடம் உட்கார்ந்திருந்தால் ஏதாவது பயனுள்ளதாக பொழுதை கழிக்கலாம் என்று அவர் அருகே சேர் போட்டு உட்கார்ந்து காதுகளை தீட்டி கதை கேட்கிறார்களாம்.