தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்த காக்கா முட்டை படத்தை தயாரித்தனர். தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரகமாக ஓடிய இந்தப் படம் தேசிய விருது உள்ளட பல்வேறு விருதுகளையும் குவித்தது.
இந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யாவின் கணவன் ஒரு வழக்கில் சிக்கி சிறையில் இருப்பார். அவரை ஜாமீனில் எடுக்க அவர் போராடுவார். இது தொடர்பான காட்சிகளில் வக்கீல்கள் பற்றி அவதூறான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி அகில இந்திய வக்கீல்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.மணிவண்ணன், தனுஷ், வெற்றிமாறன் மற்றும் படத்தின் இயக்குனர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்ட 4 பேரும் அகஸ்ட் மாதம் 6ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தனுஷ் உள்ளிட்ட 4 பேர் சார்பில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. படத்தில் வழக்கறிஞர்களை தவறாக சித்தரிக்கவில்லை. மக்கள் பேசும் வார்த்தைகளை கொண்டே வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். இதையடுத்து நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடைவிதித்தது. மனுதாரார் மணிவண்ணன் 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.