‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் இளம் நடிகர் ரன்பீர் கபூரின் சமீபத்திய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. கடைசியாக வௌிவந்த பாம்பே வெல்வெட் படமும் இந்த வரிசையில் சேர்ந்தது. இதனால் தனது அடுத்தப்படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுத்து விட என்று முழுமூச்சாக நடித்து வருகிறார். மேலும் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். ரன்பீர் கபூர் படம் தோல்வியடைந்ததால் அவரை சில விமர்சனம் செய்கின்றனர். இந்நிலையில், ரன்பீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சல்மான்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்.... ஒரு படம் தோல்வியடைந்தால் அந்த நடிகரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். எனக்கு கூட மூன்று படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. பாம்பே வெல்வட் படம் மட்டுமல்ல ஒரு படம் தோல்வி அடைந்தால் அது அந்த படம் சம்பந்தப்பட்ட எல்லோரையும் பாதிக்கும். ஒரு நடிகனுக்கு ஒரே ஒரு வெற்றி மட்டும் போதாது, அது அவனை காப்பாற்றவும் செய்யாது, அதேப்போல் ஒரே ஒரு தோல்வி அவனை பற்றி குறைவாக மதிப்பிடவும் வழி வகுக்காது என்று கூறியுள்ளார்.