'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
டோலிவுடிற்கு புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் இயக்குநர் தேஜா தற்போது ஹோரா ஹோரி எனும் தெலுங்கு இயக்கியுள்ளார். நடிகர் திலீப் மற்றும் நடிகை தக்ஷா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ ரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று(ஜூலை 29) நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் இப்படத்திற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து விட்டனர். இசையமைப்பாளர் கல்யாண் கொடுரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மழையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இளமை ததும்பும் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்படுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர். தெலுங்கானாவைச் சேர்ந்த கலைஞர்களின் தலையீடு இப்படத்தில் இருந்ததாக இப்படமும் படக்குழுவினரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.