ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே சிலருக்குத் தமிழ் பேசத் தெரிந்தாலும் தங்களுக்கு அது அரைகுறையாகத்தான் தெரியும் என்பது போலவே பேசுவார்கள். த்ரிஷா உட்பட சில நாயகிகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். லட்சுமி மேனன், நயன்தாரா, அஞ்சலி, சமந்தா, பிரியாமணி, பிரியா ஆனந்த் போன்ற நடிகைகள் நன்றாகவே தமிழ் பேசுவார்கள். மும்பையிலிருந்து வந்த தமன்னா கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு நன்றாகப் பேசுவார். அப்படி தமிழ் பேசத் தெரிந்த நடிகைகள் வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
தற்போது பல படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'இது என்ன மாயம்' அவருடைய முதல் படமாக நாளை மறுநாள் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி படத்தின் நாயகன் விக்ரம் பிரபு கூறியதாவது, “தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுடன் நடிப்பது சௌகரியமாக இருக்கும். மொழி தெரியாதவர்களுடன் நடிக்கும் போது அவர்கள் எப்போது எந்த ரியாக்ஷன் கொடுப்பார்கள் என்றே புரியாது. நாம் ஒரு டயலாக் பேச அவர்கள் வேறு ஏதோ முகபாவத்தை வெளிப்படுத்தினால் நமக்கும் நன்றாக நடிக்க வராது. 'இது என்ன மாயம்' படத்தில் நாயகி நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நன்றாகத் தமிழ் பேசுவர். அதனால், அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. 'இவன் வேற மாதிரி' படத்தில் தமிழ் தெரியாத சுரபியுடன் நடிக்கும் போது சிரமமாக இருந்தது. முதல் படமான 'கும்கி'யில் நடித்த லட்சுமி மேனன், 'அரிமா நம்பி'யில் நடித்த பிரியா ஆனந்த் ஆகியோர் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். எனவே அந்தப் படத்தில் எனக்குப் பெரிய சிரமம் இருந்ததில்லை,” என்றார்.
அவர் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான், எந்தக் காட்சியில் நடிப்பதற்கு மொழி தேவையோ இல்லையோ, காதல் காட்சிகளில் மொழி தெரிந்து கொண்டு நடித்தால்தானே 'ஃபீலிங்' சரியாக வரும்.