நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து ஏப்ரல் 17ம் தேதி வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'ஓ காதல் கண்மணி'. முந்தைய படங்களின் தோல்வியிலிருந்து மணிரத்னத்தை மீட்ட படம்தான் 'ஓ காதல் கண்மணி'. தமிழில் ஏ சென்டர்களில் மிகப் பெரிய வெற்றியையும், பி அன்ட் சி சென்டர்களில் சுமாரான வெற்றியையும் இந்தப் படம் பெற்றது. தெலுங்கில் 'ஓகே பங்காரம்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
சில மாதங்களுக்கு முன்பே இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இப்போது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களைப் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் நாயகனாக ஆதித்ய ராய் கபூர், நாயகியாக சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்க உள்ளார்களாம். படத்தை மணிரத்னத்தின் முன்னாள் ஹிந்தி உதவி இயக்குனர் ஷாத் அலி இயக்க உள்ளார். நாயகனாக நடிக்கும் ஆதித்ய ராய் கபூர், ஹிந்தி நடிகை வித்யா பாலனின் மைத்துனர் ஆவார். இதற்கு முன் ஹே ஜவானி ஹை திவானி, ஆஷிக் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சோனாக்ஷி சின்ஹா யாரென்று உங்களுக்குத் தெரியும். ரஜினிகாந்த் நடித்த தோல்விப் படமான 'லிங்கா'வில் நாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர்.
விரைவில் 'ஓ காதல் கண்மணி' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.