ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அருந்ததி படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபல நடிகையானவர் அனுஷ்கா. அதையடுத்து வில்லேஜ், சிட்டி என்று மாறுபட்ட கதைகளில் நடித்து வந்தபோதும், பாகுபலி, ராணி ருத்ரமாதேவி படங்கள் மூலம் அவர் வரலாற்றுப்பட நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த படங்களுக்காக வருடக்கணக்கில் தனது நேரத்தை செலவிட்டு வந்த அவர், இனிமேல் இப்போதைக்கு வரலாற்று படங்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டு மீண்டும பக்கா கமர்சியல் கதைகளில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, சரித்திர படங்களுக்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி கேரக்டர்களாக மாறிய அனுஷ்கா, தற்போது ஆர்யாவுடன் நடித்து வரும் இஞ்சி இடுப்பழகி படத்திலும் முதல் பாதியில் 35 வயது ஆன்ட்டி போன்ற தோற்றத்தில்தான் நடித்து வந்தார்.