ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எம்.ஜி.ஆருக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தவர் காமெடி நடிகர் ஐசரி வேலன். எம்.ஜி.ஆர் புகழ் பாடிய நடிகர்களில் முக்கியமானவர். அவரது மகன் ஐசரி கே.கணேஷ் சென்னையில் கல்வி தந்தையாக இருந்து வேல்ஸ் பல்கலைகழகத்தை நடத்தி வருகிறார்.
ஐசரிவேலனின் பேரன் வருண் நைட்ஷோ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் அவர் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த ஷட்டர் என்ற படத்தின் ரீமேக்தான் நைட்ஷோ. இதனை பிரபல எடிட்டர் ஆண்டனி இயக்குகிறார். அனுமோல், யூகி சேது, தீக்ஷிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். திங் பிக் ஸ்டூடியோ சார்பில் இயக்குனர் விஜய் தயாரிக்கிறார்.
தாத்தா வழியில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக நடனம், சண்டை, நடிப்பு பயிற்சி உள்பட அனைத்து பயிற்சிகளையும் முறையாக கற்று சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் வருண்.