‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சுப்ரமணியபுரம் படத்தின் வாயிலாக கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்வாதி நடிப்பில் தமிழில் இறுதியாக வெளிவந்த வடகறி படம் தோல்வியை தழுவியது. ஆனால் தெலுங்கில் ஸ்வாதி நடித்த சுவாமி ரா ரா, கார்த்திகேயா போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன. தற்போது ஸ்வாதி நடித்துள்ள திரிபுரா எனும் திகில் படம் திரைக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் வாயிலாக ஸ்வாதி டோலிவுட்டில் ஹாட்ரிக் ஹிட் அடிப்பார் என அப்படத்தின் இயக்குநர் ராஜா கிரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இப்படம் அதே பெயரில் தமிழிலும் திரைக்கு வரவுள்ளது. நடிகை அஞ்சலி நடித்த கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக திரிபுரா படம் உருவாக்கப்பட்டுள்ளது. கீதாஞ்சலி படத்தை இயக்கிய இயக்குநர் ராஜா கிரண் திரிபுரா படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கிரேசி மீடியா பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படுள்ளது. கீதாஞ்சலி படம் போலவே திரிபுரா படமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என இயக்குநர் ராஜா கிரண் கூறியுள்ளார்.