இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய இலியானா, ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆசை கொண்டு பாலிவுட் சென்றார். தெலுங்கு பட வாய்ப்புகளை உதறிவிட்டு ஹிந்திக்குச் சென்ற இலியானாவிற்கு முதலில் சிகப்பு கம்பளம் விரித்த பாலிவுட் தற்போது அவரை கண்டு கொள்ளாமல் கை கழுவி விட்டது. தற்போது பேன் எனும் ஒரே ஹிந்தி படத்தில் மட்டும் இலியானா நடித்து வருகின்றார். இதனால் மீண்டும் டோலிவுடிற்கே திரும்பலாமா என்று யோசித்த இலியானாவிற்கு தெலுங்கு திரை உலகிலிருந்து வந்தது என்னவோ குத்தாட்ட நடிகைக்கான அழைப்பு தான். இயக்குநர் விவி விநாயக் இயக்கத்தில் நடிகர் அக்கினேனி அகில் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் குத்தாட்டம் போட இலியானாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் இலியானா இந்த வாய்ப்பை மறுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இலியானா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளதாகக் தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அகிலுடன் ஆட இலியானா கால்ஷீட் கொடுத்துள்ளாராம். விரைவில் இதற்கான படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன.