ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமலஹாசனின் தற்போதைய ஆஸ்தான இசை அமைப்பாளரான ஜிப்ரான். 'வாகை சூடவா' படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களுக்கு இசை அமைத்த ஜிப்ரான் விஸ்வரூபம் படத்திலிருந்து கமலின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஆனார். உத்தம வில்லன், பாபநாசம் படங்களுக்கு இசை அமைத்தார்.
தனது அடுத்த கட்ட பயணம் பற்றி அவர் கூறியதாவது: 2011ம் ஆண்டு வாகை சூடவா படத்திலிருந்து எனக்கு ரசிகர்களும், மீடியாக்களும் வலுவான ஆதரவை தந்து வருகிறார்கள். பாபநாசம் வரை நான் கொடுத்த எல்லா ஆல்பங்களையும் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அடுத்து விஸ்வரூபம் 2, தூங்காவனம் படங்களில் கமல் சாருடன் இணைந்து பணியாற்றுகிறேன். ராஜதந்திரம் பட இயக்குனர் அமித், விக்ரம் இணையும் பெயரிடப்படாத படத்துக்கும், சென்னை சிங்கப்பூர் என்ற படத்துக்கும் இசை அமைத்து வருகிறேன். மலையாளம், மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகளும் வந்திருக்கிறது. அந்த மொழிகளிலும் இசை அமைக்க இருக்கிறேன் என்கிறார் ஜிப்ரான்.