ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரன்பீர் கபூர் நடிப்பில் கடைசியாக வௌிவந்த சில படங்கள் சரியாக போகவில்லை. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவர் அவசரம் காட்டாமல் நிதானம் கடைபிடித்து வருகிறார். தற்போது தமாஷா, ஜகா ஜாசூஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இதற்கு அடுத்தப்படியாக எந்த படத்திலும் ஒப்பு கொள்ளாமல் இருக்கிறார். இதுப்பற்றி விசாரித்த போது, அவரது நடிப்பில் வௌிவந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவிக்க தவறிவிட்டது. இதனால் அடுத்த தான் நடிக்கும் படம் கண்டிப்பாக வசூலை குவிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் வருகிற படங்களில் எல்லாம் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், ஒவ்வொரு கதையையும் பார்த்து தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.