ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோலிவுட்டில் தயாராகும் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களுக்கு தமிழ்நாட்டைப்போலவே கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும், தமிழ்ப்படங்களை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யாமல் தமிழிலேயே வெளியிடுகிறார்கள். அதோடு, தமிழ் நடிகர்களின் படங்கள் கேரளாவில் வெளியாகிறது என்றால், அங்குள்ள மம்மூட்டி, மோகன்லால் படங்களில் ரிலீஸ் தேதியே தள்ளிப்போய் விடுகிறதாம். அந்த அளவுக்கு தமிழ்ப்படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு அங்குள்ள மக்கள் படையெடுக்கிறார்களாம்.
அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப்படங்களை தெலுங்கில் டப் செய்து ஆந்திராவிலும் வெளியிட்டு வருகிறார்கள். தற்போதுகூட விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடித்த ஜில்லா படம் தெலுங்கு பேசிக்கொண்டிருக்கிறது. அதேபோல் சூர்யா நடித்த பல படங்கள் ஆந்திராவில் பெரிய வசூலை ஈட்டியிருக்கிறதாம்.