மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்களை விமர்சிப்பதோடு கிண்டலாக கமெண்ட்டும் அடிப்பதுதான் இப்போதைய பேஷன்.. குறிப்பாக மலையாள திரையுலகில் இது ரொம்பவே அதிகம்.. நம்ம ஊர் மாதிரி ஒரு நடிகரோட ரசிகர்கள் இன்னொரு நடிகரை தாக்கி கமெண்ட் போடுற மாதிரியெல்லாம் இல்லை.
அந்த வகையில் மோகன்லால் தான் இதுபோன்ற கமெண்ட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர். இப்போது இளம் நடிகர் ஆசிப் அலியையும் கூட இந்த பேஸ்புக் கமெண்ட்டர்கள் விட்டுவைக்கவில்லை. ஒரு ரசிகர் ஒருபடி மேலேபோய், “நீ இன்னுமா நடிச்சுட்டு இருக்க.. நடிக்கிறத நிறுத்தலையா' என ஒரு கமென்ட் போட்டிருந்தார். அதை படித்த ஆசிப் அலி அவன் பேஸ்புக் புரபைலில் இருந்து அவனுடைய நம்பரை கண்டுபிடித்து போன் செய்தாராம். அதற்கு அவன் கூலாக, சும்மா ஜோக்குக்காக கமெண்ட் போட்டேன் என்றானாம். அடுத்தவரை அவமானப்படுத்துவதும் அவர் மனதை காயப்படுத்துவதுமா ஜோக் என ஆசிப் அலி, அந்த பேஸ்புக்வாசியை பரேடு வாங்கிவிட்டாராம்.