Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரக்தியில் விஜய்சேதுபதி!

27 ஜூலை, 2015 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Vijay-sethupathi-in-sad-mood

கமல் - ரஜினி, விஜய் - அஜித் வரிசையில் ஒப்பிடப்பட்ட இளம் ஹீரோக்கள் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி. இவர்களில் சிவகார்த்திகேயன் தன் பாதையை திட்டமிட்டு மிகச்சரியாய் பயணப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்ல தொடர்ந்து வெற்றியையும் பெற்று வருகிறார். அவரது போட்டியாளராக கருதப்பட்ட விஜய்சேதுபதியோ வெற்றியை தவறவிட்டுக் கொண்டிருக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம், சூது கவ்வும், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பலகுமாரா, பீட்சா என ஆரம்பத்தில் வரிசையாக வெற்றிப்படங்களைக் கொடுத்த விஜய்சேதுபதிக்கு அதன் பிறகு தோல்விப்படங்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு என விஜய்சேதுபதி நடித்த படங்கள் அனைத்துமே தொடர்ந்து தோல்வியிடைந்து வருகின்றன. அதன் காரணமாக அவர் நடித்த இடம்பொருள் ஏவல் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. அது மட்டுமல்ல, விஜய்சேதுபதி தயாரித்த ஆரஞ்சமிட்டாய் படத்துக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அதனால் ஆரஞ்சுமிட்டாய் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன. இதுவரை 100 தியேட்டர்கள் கூட இறுதி செய்யப்படவில்லை. அதேதினத்தில் சகலகலாவல்லவன், இது என்ன மாயம் உட்பட வேறு படங்களும் வெளிவருவதால் ஆரஞ்சுமிட்டாய் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் அதிகமாகிவிட்டது. எனவே படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா தன் சகாக்களிடம் ஆலோசனை செய்து வருகிறாராம் விஜய்சேதுபதி. அவர் இந்த முடிவுக்கு வர காரணம்... ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு விளம்பரம் செய்ய போதிய அளவு பணம் இல்லையாம். இதனால் விரக்தியடைந்து காணப்படுகிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in