தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு அவரது மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம் சரண் திரையில் சண்டை பயிற்சி சொல்லிக் கொடுக்கின்றாராம். இயக்குநர் ஸ்ரீனு வைட்டால இயக்கத்தில் நடிகர் ராம் சரண் சண்டைப் பயிற்சி கலைஞராக நடித்து வருகின்றார். ப்ரூஸ் லீ என பெயரிடப்படுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தில் ராம் சரண் திரைப்பட நடிகர்களுக்கு சண்டைப் பயிற்சிகள் சொல்லித் தரும் ஸ்டன்ட் மாஸ்டராக நடிக்கின்றார். இப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். சிரஞ்சீவிக்கு சண்டை பயிற்சி கற்றுக்கொடுப்பது போன்று ராம் சரண் நடிக்கின்றாராம். இதனால் ராம் சரண் ரசிகர்கள் மட்டுமல்லாது சிரஞ்சீவி ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். சிரஞ்சீவி மட்டுமல்லாது டோலிவுட்டின் பிரபல நடிகர்களான பவன் கல்யாண், நாகார்ஜுனா, ரானா டகுபதி ஆகியோரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். டோலிவுட்டின் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிப்பதால் இப்படம் ரசிகர்களைக் கவரும் என ராம் சரண் கூறுகின்றார். மேலும் தன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள பிரபலங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.