ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பரத் நடித்து வரும் புதிய படம் என்னோடு விளையாடு. அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இந்த ஜோடியுடன் மதயானைக்கூட்டம் கதிரும், அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடிக்கிறார்கள். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மொஸ் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். புதுமுகம் அருண் கிருஷ்ணசாமி இயக்குகிறார்.
படத்தின் கதை குதிரை பந்தையத்தை மையமாக கொண்டது. பரத் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர் பதவியில் இருக்கிறவர். அவருக்கு சாகசங்கள் செய்வதில் விருப்பம் அதிகம். குறிப்பாக குதிரையேற்றம். சிறுவயதில் இருந்தே குதிரைகள் மீது ஒரு மோகம் அவருக்கு. சென்னையில் நடக்கும் ஒரு முக்கிய குதிரைபந்தையத்தில் பரத் கலந்து கொள்ள தயாராகிறார். அங்குதான் அவர் கதிரை சந்திக்கிறார்.
கதிர் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் ஒரு இளைஞர். அவர் ஒரு நண்பனின் அறையில் ஒரு நாள் தங்குகிறார். அந்த ஒரு நாளில் அவர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து தப்பிக்க அவர் அலைந்து கொண்டிருக்கும்போதுதான் குதிரை பந்தைய மைதானத்தில் பரத்தை சந்திக்கிறார். கதிருக்கும், பரத்திற்கும் என்ன சம்பந்தம். சந்திப்புக்கு பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பரபர திரைக்கதை.