பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
த்ரிஷ்யம் திரைப்படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, விரைவில், அந்த படம் பாலிவுட்டிலும் வெளியாக உள்ளது. த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கில், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. படக்குழுவினர், பட புரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஜய் தேவ்கன் கூறியதாவது, இதுபோன்ற கதையை தான், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தேன். தான் இதுவரை, மசாலா காமெடி மற்றும் எண்டர்டெய்ன்மெண்ட் படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளேன். சீரியசான படங்களை நான் வேண்டுமென்றே தவிர்த்து வந்துகொண்டிருந்தேன். இந்நிலையில் தான் த்ரிஷ்யம் படத்தின் கதையை கேள்விப்பட்டேன். இந்த படத்திற்காக தான், தான் இதுவரை சீரியஸ் கதைகளில் நடிக்கவில்லையோ என்று எனக்குள் நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். த்ரிஷ்யம் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று அஜய் தேவ்கன் கூறினார்.