ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டில் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரணும் அதிரடி நாயகன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் நல்ல நண்பர்களாக அறியப்படுகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில் ராம் சரண் படத்தில் பின்னணி பேசுவதற்கு ஜூனியர் என்.டி.ஆர் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் புரூஸ் லீ படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பின்னணி பேசவுள்ளாராம். அண்மையில் ஜூனியர் என்.டி.ஆரைச் சந்தித்த இயக்குநர் ஸ்ரீனு இப்படத்தின் துவக்கத்தில் வரும் சில காட்சிகளுக்கு பின்னணி பேசுமாறு அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு ஜூனியர் என்.டி.ஆர் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளார். தன்னயா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.