ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகைகளைப் பற்றிய பேசும் போது அவர்களின் தோற்றம் பற்றியும் உடல் பராமரிப்பு பற்றியும் அறியும் ஆர்வம் பலருக்கும் இருக்கும். என்ன உணவு சாப்பிடுகிறார்கள் என்று அறிய ரசிக மனம் குறிப்பாகப் பெண்கள் மனம் விரும்புவர் இது பற்றிக் கேட்கும் போது. சிலர் உண்மைகளைப் பேசுவதுண்டு. சிலர் ஏதாவது கூறிச் சமாளிப்பதுண்டு. அதை ஒரு ராணுவ ரகசியம் போல எண்ணி பல நடிகைகள் வெளிப் படையாகப் பேசுவதில்லை.
இதே கேள்வியை, நடிகை எமி ஜாக்சனிடம் கேட்ட போது "முக்கியமாக என் ஆரோக்கிய ரகசியம் ஏபிசி. அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றும்தான் என் அன்றாட உணவுகளில் அவசியம் இருக்கும். ஆப்பிள், பீட்ரூட் கேரட் இவற்றின் சாறுகளை தவறாது தினமும் பருகுவேன் இவை செய்யும் ஆரோக்கியம் வேறு உணவு வகையில் கிடைக்காது. என்பவர், தன் உணவு வகைகளைப் பட்டியலிடும் போது தனது காலை விடியல், எலுமிச்சை சாறு கலந்த வெந்நீருடனே தொடங்கும், பின்னர் ஓட்ஸ், தேன், முட்டை, சிக்கன் சாலட், இனிப்பு உருளை, மாதுளை, நண்டு, மீன், சிக்கன், பச்சையம் நிறைந்த காய்கறிகள் போன்றவை இருக்கும் என்கிறார்.