மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
விஜய் பட ஆடியோக்களுக்கு இப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. துப்பாக்கி, கத்தி படங்களில் விஜய் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால் அப்படங்களின் சிடிக்கள் அதிகமாக விற்பனையானது. அந்த வரவேற்பினை கருத்தில் கொண்டு தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தின் ஆடியோக்கள் பெரிய அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், செப்டம்பர் மாதம் புலி படத்தை வெளியிட திட்டமிட்டு தற்போது கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட 2-ந்தேதி புலி படத்தின் ஆடியோ விழாவை, மகாபலிபுரம் அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு போன்று ஆடியோ சிடிக்களுக்கான முன்பதிவையும் அமேசான் வர்த்தக இணையதளத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளனர். ஒரு சிடிக்கு 120 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் 2-ந்தேதி ஆடியோ ரிலீஸ் நடக்கும் அன்று காலையே சிடி புக் பண்ணியவர்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.