விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் |
விஜயசேதுபதி நடிக்கும் படங்களைப் பார்த்தால் அவருக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் இலலாமல், உடன் நடிக்கும் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அவர் அதிகமாக பேசவே மாட்டார். அவரை சுற்றியிருந்த நண்பர்கள்தான் அதிக டயலாக் பேசியிருந்தனர்.
அதேபோல், ரம்மி படத்தில் இனிகோ பிரபாகர் நாயகனாக நடிக்க, விஜயசேதுபதி செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திலும் இன்னொரு ஹீரோவுக்கு விட்டுக்கொடுத்து நடித்திருந்தவர், இப்போது இடம்பொருள் ஏவல் படத்தில் விஷ்ணுவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தான் தயாரித்து வசனம் எழுதி நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்திலும், தனக்கு ஜோடியோ, டூயட்டோ இல்லாத 55 வயது முதியவர் கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜயசேதுபதி. ஆனால், அப்படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கிற்கு ஹீரோ போன்ற வேடத்தை கொடுத்திருக்கிறார் விஜயசேதுபதி. அந்த வகையில், ரமேஷ்திலக்கிற்குதான், அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புதுமுக நடிகை அஷ்ரிதாவுடன் லவ், டூயட் எல்லாம் உள்ளதாம். விஜயசேதுபதி படத்தில் தனக்கு இத்தனை பெரிய ரோல்கிடைத்ததால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கிறார் ரமேஷ் திலக்.