'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
கும்கி தொடங்கி கொம்பன் படம் வரை ஹீரோயினியாக மட்டுமே நடித்து வந்த லட்சுமிமேனன், தற்போது அஜித்தின் 56வது படத்தில் தங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் மறுத்தபோதும், எனக்கு ஹீரோயினி இமேஜ் தேவையில்லை. நான் நடிகையாக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அதையடுத்து, தங்கையாகி விட்ட நடிகையை எப்படி கதாநாயகியாக புக் பண்ணுவது என்று சிலர் தயங்கி நின்றபோது, நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்திராஜன், ஜெயம்ரவியை வைத்து தான் இயக்கும் ஹாரர் படத்துக்கு மீண்டும் கதாநாயகியாக அவரை புக் பண்ணியுள்ளார். இந்த படத்தில் லட்சுமிமேனன் ஹீரோயினி என்பதைவிட ஒரு மிரட்டலான வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள்.