ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர்கள் ஹரி, லெனின் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ஜே வேலு இயக்கும் படம் எப்போ சொல்லப்போற. ஆர்.தாரா தயாரிக்கிறார். இதில் எம்.ஜி.ஆரிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்த கனகு.கிருஷ்ணனின் மகன் வெங்கட் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக உமாஸ்ரீ, சோனியா என்ற இரண்டு புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கே.பி.ஆல்வின் இசை அமைக்கிறார், ஹார்முக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை பற்றி இயக்குனர் வேலு கூறியதாவது:
இதுவரை சினிமா ஒக்கேனக்கலை பாடல் காட்சிகளுக்கும், சண்டை காட்சிகளுக்கும் மட்டும்தான் பயன்படுத்தியிருக்கிறது. முதன் முறையாக, ஒக்கேனக்கலை கதை களமாக வைத்து முழு படத்தையும் ஒக்கேனக்கலிலேயே எடுத்து முடித்திருக்கிறோம். இதற்காக நாங்கள் ஹீரோ தேர்வு செய்தபோது இண்டர்வியூவிற்கு வந்தவர் வெங்கட். கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தோம். அதன் பிறகுதான் அவர் எம்.ஜி.ஆரின் உதவியாளர் கனகு.கிருஷ்ணனின் மகன் என்பது தெரிந்தது.