பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணுவிஷால், நந்திதா நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.
இடம் பொருள் ஏவல்படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு மிகவும் திருப்தியாம். பிரபல இயக்குநர்கள் பாக்யராஜ்; வசந்த், கரு.பழனியப்பன், தயாரிப்பாளர்கள் டி.சிவா, அன்புச் செழியன், கவிஞர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு போன்ற பலரும் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி பேசவே மாட்டாராம். விஷ்ணு விஷால் அதிகம் பேசுவாராம். அப்படிப்பட்ட முரண்பட்ட கேரக்டர்களாம்.