டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சண்டிவீரன் படத்தில் களவாணியில் விமல் நடித்தது போன்று கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார் அதர்வா. கிராமத்து வாசனையே இல்லாமல் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த அவருக்கு அந்த சூழல் ரொம்பவே பிடித்து விட்டதால், சில மாதங்களாக லுங்கி, பனியன் அணிந்த கிராமத்து பையனாக சண்டிவீரனில் அதிக ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்.
அந்த படத்தையடுத்து வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலரின் பெயர் அடிபட்டு வந்த நிலையில், இப்போது மும்பை அழகி பூஜா ஜாவேரி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த பூஜா ஜாவேரி இதையடுத்து ரோமியோ ஜூலியட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும் நடிக்கிறாராம். அருள்நிதி நடித்த தகராறு படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இந்த படத்தை இயக்குகிறாராம்.