‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சினிமாவில் ஆக்சன் படங்கள் என்றால் அதில் நடிக்கும் ஹீரோக்களைப் போன்ற சாயலில் இருக்கும் டூப் நடிகரை முன்கூட்டியே ரெடி பண்ணி விடுவார்கள். ஆனால் சமீபகாலமாக டூப் நடிகரை யூஸ் பண்ணுவதை சில ஹீரோக்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதற்கு காரணம், முன்பெல்லாம் ரோப் சிஸ்டமெல்லாம் கிடையாது. நடிகர்களே கரணம் அடிக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. அதனால் கட்டாயமாக டூப் நடிகரை பயன்படுத்தினர். ஆனால் இப்போது பாதுகாப்பான வழிமுறைகள் நிறைய வந்து விட்டது. அதனால் முன்னணி நடிகர்களே டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடிக்கிறார்கள்.
அந்த வகையில், பல அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட அஜித்கூட சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்திக்கொள்வதில்லை. இயக்குனர்கள் அவருக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்தால், அடுத்தவர் கஷ்டப்பட்ட நடிப்பதற்கு கிடைக்கும் கைதட்டலை நான் பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று சொல்லிக்கொண்டு தானே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் விஜய்யும் டூப் பயன்படுத்தப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். இந்த படத்தில் வில்லன்களுடன் மோதும் ஆவேச சண்டை காட்சிகள் இரண்டு உள்ளதாம். இந்த காட்சிகளில் நடிப்பதற்கு முன்னதாகவே போதிய பயிற்சி எடுத்துக்கொண்டு விஜயே நேரடியாக மோதுகிறாராம்.