டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிபிராஜ் நடிப்பில் 'நாணயம்', 'நாய்கள் ஜாக்கிரதை' ஆகிய படங்களை இயக்கிய சக்தி ராஜன், தற்போது இயக்கி வரும் படத்தில் 'ஜெயம்' ரவி கதாநாயகனாக நடிக்கிறார். நாடோடிகள் உட்பட பல படங்களைத்தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தற்போது 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித்துக்கு தங்கச்சியாக நடித்து வரும் லட்சுமி மேனன், சக்தி ராஜன் இயக்கும் இந்தப் படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் அவர் 'பேய்' ஆகவும் நடிக்கிறாராம்! 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனைகாவும் இந்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.