இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளத்தில் 'பிரேமம்' படத்தின் சென்சார் காப்பி வெளியாகி முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதில் ஈடுபட்டதாக இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட மூன்றுபேரை போலீசார் கைது செய்தாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளி இன்னும் பிடிபடமாலேயே இருக்கிறார்கள். இந்த விவகாரத்தின் சூடே இன்னும் குறையவில்லை. அதற்குள் பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் கடந்தவாரம் வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் சென்சார் காப்பியும் ஆன்லைனில் வெளியாகி பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒருபடம் திருட்டுத்தனமாக வீடியோவில் படமாக்கப்பட்டு அது ஆன்லைனில் வெளியானால் கூட அவ்வளவு பெரிய பாதிப்பு இருக்காது. காரணம் அது சுமாரான குவாலிட்டியாகத்தான் இருக்கும். பெரிய அளவில் அவற்றை விரும்பி பார்ப்பவர்கள் குறைவு.. ஆனால் சென்சார் காப்பி என்பது அதிகபட்ச தரத்தில் இருக்கும் ஒரிஜினல் காப்பி. அது வெளியாகி, அந்த காப்பி மூலம் திருட்டு டிவிடிக்கள் போடப்பட்டால் தியேட்டர்களில் வசூல் அதலபாதளத்திற்கு போய்விடும்.
இந்த சென்சார் காப்பி வெளியாவதற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் போர்டு அலுவலகத்திற்கு வந்தபின் லீக்காக்கி இருக்க வேண்டும்.. இல்லையென்றால், எடிட்டிங் டேபிளில் இருந்து பைனல் அவுட்புட் எடுக்கப்பட்டு சென்சார் அலுவலகத்திற்கு போகும் வழியில் விஷமிகள் இதை இன்னொரு பிரதி எடுத்திருக்க, அதாவது காப்பி செய்திருக்கவேண்டும். சல்மான்கான் படம் பல படங்களின் வசூல் ரெக்கார்டுகளை முறியடித்து ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி ஆன்லைனில் லீக்கான விவகாரம் அதன் வசூலை பாதிக்கும் என்றே தெரிகிறது.