பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பாகுபலி' படம் ஜுலை 10ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. ஒரு சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்ட இந்தப்படம் இந்த வார முடிவில் 400 கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்கிறார்கள். தென்னிந்திய திரையுலகத்தின் முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்து வரும் 'பாகுபலி' நாம் முன்னர் சொன்னது போலவே 500 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுவிடும் என்பது தற்போது உறுதியாகத் தெரிகிறது.
நேற்றுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்தில் சுமார் 388 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்துள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 50 கோடி, கர்நாடகாவில் 50 கோடி, கேரளாவில் 8 கோடி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 100 கோடி, வெளிநாடுகளில் 60 கோடி ரூபாய் என வசூலித்துள்ளதாம். இது தியேட்டர்கள் வசூல் மட்டுமே. சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமைகளையும் சேர்த்தால் அது 450 கோடி ரூபாயைத் தொட்டுவிடும்.
இன்னும் சில வாரங்கள் இந்தப் படம் ஓடினால் இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவிக்கும் படமாக அமைந்துவிடும்.