‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தனுஷ் நடித்த மாரி படம் அண்மையில் வெளியாகி கமர்ஷியலாக வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாரி படத்தில் பணியாற்றியவர்களை தன் வீட்டுக்கே அழைத்து தங்கச்சங்கிலி பரிசளித்தார் தனுஷ். மாரி படக்கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசு கொடுத்த தனுஷ் மீது தற்போது ஒரு விமர்சனம் கிளம்பியுள்ளது.
தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலைக் குவித்த படம் - காக்கா முட்டை. புதுமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படம் ரிலீசாவதற்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளைக் குவித்தது. ஜூன் 5- ஆம் தேதி வெளியான காக்கா முட்டை படம் நல்ல வசூலையும் தந்தது. சுமார் 15 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் இன்று 50 ஆவது நாளைத்தொட்டு, இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ் அப்படத்தில் நடித்த சிறுவர்களின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார்! இப்போது மாரி படத்தின் கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசளித்த காரணத்தினாலோ என்னவோ, காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களுக்கு கல்வி செலவு என்பது சின்ன தொகைதான் வரும். அதற்கு பதில் அவர்களுக்கு வீடு வாங்கிக் கொடுக்கலாமே என்ற அபிப்ராயங்கள் சொல்லப்படுகின்றன. தனுஷ் காதில் விழுந்து அந்த இரண்டு சிறுவர்களுக்கும் நல்லது நடந்தால் சரி..!