ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், முன்னணி நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், குறும்படங்களின் வளர்ச்சிக்காக, "டென் எண்டர்டெய்ன்மெண்ட்" என்ற பெயரில் யூடியூப் சேனலை துவக்கியுள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ், கோலிவுட்டில், "3" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பின், வை ராஜா வை படத்தை இயக்கினார். அந்த படமும் தோல்வியையே சந்தித்தது.
பாலாஜி மோகன், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட குறும்பட இயக்குநர்களின் ஆதிக்கம் கோலிவுட்டில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, குறும்படங்களின் வளர்ச்சிக்கு, இந்தே புதிய யூடியூப் சேனல் உறுதுணை புரியும் என்று ஐஸ்வர்யா தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளிலான குறும்படங்களையும் இதன்மூலம் ஊக்கப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.