ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல சின்னத்திரை இயக்குநர் விடுதலை காலமானார். அவருக்கு வயது 52. ''எத்தனை மனிதர்கள்'', ''வார்த்தை தவறிவிட்டாய்'', ''அக்கினிசாட்சி'', ''ஆனந்தம்'', ''அவளும் பெண் தானே'', ''குறிஞ்சி மலர்'' போன்ற சின்னத்திரை சீரியல்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் வசித்து வந்த விடுதலை, இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிசடங்கு நாளை அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடக்க இருக்கிறது. விடுதலையின் மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.