Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பஹத் பாசில் தம்பி படம் ; திருட்டுத்தனமாக அப்லோடு செய்தவர் பிடிபட்டார்..!

24 ஜூலை, 2015 - 14:28 IST
எழுத்தின் அளவு:
A-person-who-arrested-uploading-movie-in-website

மலையாள திரையுலகில் பிரேமம் படம் ஆன்லைனில் லீக்கான பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வந்தப்பாடில்லை.. அதற்குள் இன்னொரு படத்தை அனுமதியின்றி 'யு-டோரண்ட் இணையதளத்தில் திருட்டுத்தனமாக அப்லோடு செய்தவர் பிடிபட்டுள்ளார். பஹத் பாசிலின் தம்பி பர்ஹான் பாசில் ஹீரோவாக அறிமுகமான படம் 'ஞான் ஸ்டீவ் லோபஸ்'.. நடிகை கீது மோகன்தாசின் கணவரும் பஹத் பாசில் நடித்த 'அன்னையும் ரசூலும்' படத்தை இயக்கியவருமான ராஜீவ் ரவி என்பவர் தான் இந்தப்படத்தையும் இயக்கினார். படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே ரிலீஸ் ஆகிவிட்டது.


தற்போது இந்தப்படத்தை ஆன்லைனில் வெளியிடும் உரிமையை ரீல் மாங்க் என்கிற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தனர். இதன்மூலம் ஆன்லைனிலும் மலையாளப்படங்களை ரிலீஸ் செய்வதில் முதல் படியில் அடியெடுத்து வைப்பதால் கேரள தயாரிப்பாளர்கள் சந்தோஷத்துடன் இந்த திட்டத்தை துவக்கி வைத்தனர். அதன்படி நேற்று முன்தினம் இந்தப்படம் கட்டணம் செலுத்தி பார்க்கும் விதமாக ஆன்லைனில் வெளியானது. ஆனால் அதேசமயம் மறுநாளே இந்தப்படத்தை கேரளா காசர்கோடு பகுதியை சேர்ந்த அகில் என்பவர் யு-டோரண்ட் இணையதளத்தில் பதிவேற்றிக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.


அவர் பிடிபடும்போது படம் அப்லோடு ஆகி முடிய இன்னும் 12 நிமிடங்களே இருந்தனவாம். அவரை பிடித்தவர்கள் உடனே அதை நிறுத்துமாறு கூற, ஒருமுறை அப்லோடு செய்துவிட்டால் அதை நிறுத்தவோ, அழைக்கவோ முடியாது என பிடிபட்ட நபர் கூறியுள்ளான். அவனை ஆண்டி பைரஸி செல்லில் ஒப்படைத்தனர் ரீல் மாங்க் நிறுவனத்தார். இதன் பின்னணியில் இருக்கும் பெரிய கை யார் என வழக்கம்போல விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in