ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. தமிழ், மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். புதுமுக நடிகைகளின் வரவு பல இருந்தும் த்ரிஷாவிற்கான படங்களும், வாய்ப்புகளும் குறைவில்லாமல் இருந்து கொண்டிருக்கிறது. தற்போது ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர் படத்தில் நடித்திருப்பவர் அடுத்தப்படியாக கமலின் தூங்காவனம் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயமாகி பின்னர் அது முறிந்தது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலையில்லாமல் சினிமாவில் முழு ஈடுபாட்டோடு நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா அதிமுக., கட்சியில் இணையபோவதாக இருதினங்களாக செய்திகள் வௌிவந்த வண்ணம் உள்ளது. மேலும், இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடந்தபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகை த்ரிஷாவுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அந்தப்படத்தை இப்போது வரை தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பில் மாற்றமாமல் வைத்துள்ளார். இதனால் அவர் அதிமுக., வில் இணையபோகிறார் என்று செய்திகள் பறந்தன.
ஆனால் இதனை மறுத்துள்ளார் த்ரிஷா. இதுப்பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா கூறியிருப்பதாவது... தற்போது வௌியாகி இருக்கும் செய்தி போன்று எனக்கு அரசியலில் எல்லாம் சேரும் எண்ணமில்லை. இப்போது மட்டுமல்ல... எதிர்காலத்திலும் அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.