'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் நானி எவிடே சுப்ரமணியம் படத்திற்கு பின்னர் டோலிவுட்டில் நடித்து வரும் பலே பலே மகாதேவ் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அல்லு அரவிந்த் தயாரிக்கும் இப்படத்தை, இயக்குநர் மாருதி இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்து வருகின்றார்.
இப்படம் குறித்து இயக்குநர் மாருதி கூறுகையில், நானி இப்படத்தில் துள்ளான இளைஞனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட இப்படம் கண்டிப்பாக இளைஞர்களைக் கவரும் என கூறியுள்ளார். முக்கியமாக காதலர்களுக்கு இப்படம் பிடிக்கும் என இயக்குநர் மாருதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன.விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் கூறுகின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.