மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டோலிவுட்டில் நகைச்சுவை நாயகனாக வெற்றி கண்டுள்ள நடிகர் அல்லரி நரேஷ் நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் இன்று (ஜூலை 24) திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் நானி எனும் மென்பொருள் பொறியாளராக நடித்துள்ள அல்லரி நரேஷ், பெண் தாதாவான சாக்ஷி சௌத்ரியின் மீது காதல் கொள்வதும் அதனால் வரும் பிரச்சனைகளையும் நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகலாம் என இயக்குநர் கருதியுள்ளார். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்ததால் நடிகை சாக்ஷி சௌத்ரியை படத்தின் நாயகியாக தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் சாய் கிஷோர் கூறியுள்ளார். இப்படத்தில் பெண் தாதாவாக நடித்துள்ள சாக்ஷி இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகள் கற்றுக் கொண்டாராம். இப்படத்தில் நடிகர்கள் ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெய பிரகாஷ் ரெட்டி, ரகு பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்.ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.