Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியீடு!

23 ஜூலை, 2015 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Sivaji,-Prabhu,-Vikram-Prabhu-movie-clasing-in-same-day

சிவாஜி கணேசன் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'. பழம்பெரும் இயக்குநரான பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய இப்படம் 1959 ஆம் ஆண்டு வெளியானபோது வசூலில் பெரும் சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றியடைந்தது. பிரம்மாண்டமான இந்தப் படத்தை இன்றைய தலைமுறையினர் பார்க்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியிட உள்ளனர். இம்மாதம் 31 ஆம் தேதி 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை வெளியிட இருக்கிறார்கள். இதே தினத்தில்தான் சிவாஜியின் மகன் பிரபு நடித்துள்ள 'சகலகலா வல்லவன் - அப்பா டக்கர்' படம் வெளியாகிறது.


ஆச்சர்யம் அதோடு முடியவில்லை. சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்துள்ள 'இது என்ன மாயம்' படமும் அதே நாளில் அதாவது ஜூலை 31 அன்று ரிலீசாகவிருக்கிறது. மூன்று திலகங்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.


ஜூலை 31 அன்று இந்த மூன்று படங்கள் தவிர விஜய்சேதுபதி நடித்த ஆரஞ்சுமிட்டாய் உட்பட மேலும் சில படங்கள் வெளிவருவதாக தகவல் அடிபடுகிறது. அதுமட்டுமல்ல, ஜூலை 17 அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் நீதிமன்றத்தின் தடைஉத்தரவினனால் வெளிவராமல் போன சிம்பு நடித்த வாலு படத்தையும் ஜூலை 31 அன்று வெளியிட தீவிரமான முயற்சியில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in